- விண்ணப்பங்களை பின்வருவோருக்கு சமர்ப்பிக்க வேண்டும்,
- விண்ணப்பதாரர் கண்டி மாகாணத்தில் வதிபவராக இருந்தால், விண்ணப்பதாரர் குடியிருக்கின்ற பிரதேசத்திற்கு உரிய பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளருக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் கண்டி மாகாணத்திற்கு வெளியில் வதிபவராக இருந்தால், விண்ணப்பதாரர் குடியிருக்கின்ற பிரதேசத்திற்கு உரிய பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளருக்கு அல்லது விவாகம் பதிவுசெய்யப்பட்ட இடத்தில் உள்ள பதிவாளருக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- விவாக இரத்தை அறிவித்து மாவட்ட பதிவாளரிடம் குறித்த விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்க.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட வெளிப்படுத்தல்
- விவாக சான்றிதழ் (கண்டியர்)
- முறைப்பாட்டை நிரூபிப்பதற்கான ஏனைய ஆவணங்கள் இருந்தால்
- மாவட்ட பதிவாளர் இருதரப்பினரையும் விசாரணைக்காக அழைப்பார்.
- சமர்ப்பிக்கப்பட்ட விவாகம் தொடர்பான விண்ணப்பம் தொடர்பில் முடிவை வழங்குவார் அல்லது அத்தகைய விவாகம் தொடர்பில் முடிவை வழங்க மறுப்பார்.
- ஒரு தரப்பு அந்த முடிவில் திருப்தியடையாவிட்டால், 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளருக்கு விண்ணப்பிக்க முடியும்.
- மாவட்ட பதிவாளர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டை சமர்ப்பித்து மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் செயலாற்றுவார்.














