- பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்கள் பிறப்பை பதிவுசெய்யாமலிருந்தால் அதை பதிவுசெய்யலாம்.
- பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளருக்கு வெளிப்படுத்தலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- இதற்குத் தகுதியானவர்கள்
- இதில் ஆர்வம்காட்டுகின்ற எவரேனும் ஒருவர்
- பெற்றோர்களில் ஒருவர்.
- அறவிடப்படும் கட்டணம் ரூ.50.00
- பிறப்பு நிகழ்ந்ததிலிருந்துஒரு வருடத்திற்கு வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
- பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
- வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
- கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
- தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
- பொது சுகாதார அதிகாரியின் சான்றிதழ்.
- பிறப்பு நிகழ்ந்து ஒரு வருடத்தின் பின்னர் வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
- வெற்று பெறுபேற்று தாள்
- பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
- வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- சுகாதார மருத்துவ தாதியின் பிறப்பு பதிவேட்டின் பிரதி
- மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் எதுவும் இல்லாத சந்தர்ப்பங்களில்,
- சுகாதார அபிவிருத்தி பதிவேடு
- ஞானஸ்னான சான்றிதழ்
- பாடசாலை அனுமதி பதிவேட்டின்/மாணவர் அறிக்கையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- தோட்ட நலனோம்பல் அதிகாரியின் அறிக்கை
- பிறப்பு நிகழ்ந்த திகதியை ஒட்டி நேரம் கணிக்கப்பட்ட ஜாதக பதிவின் பிரதி
- இந்த ஆவணங்களில் எதுவும் இல்லாவிட்டால், அறிந்த விடயங்களை வெளிப்படுத்தும் ஒரு சத்திய கடதாசி.














