• பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்கள் பிறப்பை பதிவுசெய்யாமலிருந்தால் அதை பதிவுசெய்யலாம்.
  • பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளருக்கு வெளிப்படுத்தலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இதற்குத் தகுதியானவர்கள்
    • இதில் ஆர்வம்காட்டுகின்ற எவரேனும் ஒருவர்
    • பெற்றோர்களில் ஒருவர்.
  • அறவிடப்படும் கட்டணம் ரூ.50.00
  • பிறப்பு நிகழ்ந்ததிலிருந்துஒரு வருடத்திற்கு வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
    • பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
    • பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
      • வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
      • கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
      • தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
      • பொது சுகாதார அதிகாரியின் சான்றிதழ்.
  •  பிறப்பு நிகழ்ந்து ஒரு வருடத்தின் பின்னர் வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
    • பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
    • வெற்று பெறுபேற்று தாள்
    • பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
      • வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
      • கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
      • தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
      • சுகாதார மருத்துவ தாதியின் பிறப்பு பதிவேட்டின் பிரதி
    • மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் எதுவும் இல்லாத சந்தர்ப்பங்களில்,
      • சுகாதார அபிவிருத்தி பதிவேடு
      • ஞானஸ்னான சான்றிதழ்
      • பாடசாலை அனுமதி பதிவேட்டின்/மாணவர் அறிக்கையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
      • தோட்ட நலனோம்பல் அதிகாரியின் அறிக்கை
      • பிறப்பு நிகழ்ந்த திகதியை ஒட்டி நேரம் கணிக்கப்பட்ட ஜாதக பதிவின் பிரதி
      • இந்த ஆவணங்களில் எதுவும் இல்லாவிட்டால், அறிந்த விடயங்களை வெளிப்படுத்தும் ஒரு சத்திய கடதாசி.

News & Events

18
ஜன2023
2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2026 ஓய்வூதியம் செலுத்தும் தேதி                     மாதம்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top