- படி 1: பதிவு விவாகத்திற்கு முன்பே விவாக பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
- படி 2: விண்ணப்பதாரர் விவாக பதிவாளரை சந்தித்தல்-விவாக பதிவாளர் விண்ணப்பதாரரை சந்தித்தல்.
- படி 3: விண்ணப்பதாரரின் வயது வரம்பை சரிபார்த்தல் (தேசிய அடையாள அட்டை அல்லது பிறந்தசான்றிதழ் கொடுத்தல்)
- படி 4: விண்ணப்பதாரர்கள் கைகளை மற்றும் விவாகத்திற்கான சத்தியபிராமனத்தை திரும்பக்கூறுதல் வேண்டும்.
- படி 5: பதிவாளர் விண்ணப்பதாரரின் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்வார்.
- படி 6: சாட்சியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தில் கையொப்பம் இடுவார்கள்.
- படி 7: விவாக சான்றிதழ் விண்ணப்பதாரர் பெறுதல்.
தகுதி:
கீழ் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி விண்ணப்பதாரர்கள் இந்த சேவையைப் பெறலாம்,
- விண்ணப்பதாரரின் வயது பதினெட்டு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் இருவரும் இஸ்லாமியராக இருக்ககூடாது.
- விண்ணப்பதாரர்கள் பாரம்பரிய கண்டியன் பிரிவினை சார்ந்தவராக இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக நுவரெலியா, மாத்தளை, கண்டி, அநுராதபுரம், பொலநறுவை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகல, தெற்கு-வவுனியா)
சமர்ப்பிக்கும் முறைகள்:
விண்ணப்பதாரர் அந்த வட்டார விவாகப் பதிவாளரிடம் விவாகம் நடப்பதற்கான தகவலை முன்கூட்டியே தெரிவித்து விவாகத்தை பதிவு செய்வதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
விண்ணப்பப்படிவம்:
காலக்கேடு:
- செயல்முறை காலக்கேடு: ஒரு நாளுக்குள்
- சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு: குறிப்பிட்ட காலக்கோடு இல்லை.
- ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப்படும்.
சேவை தொடர்பான கட்டணங்கள்:
- செலவினத்துக்குரிய விண்ணப்பத்தை பெறுதல்: விண்ணப்பத்தை கட்டணம் இன்றி இலவலசமாக வழங்குதல்.
- கட்டணம்: சேவை கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படும்.
- அபராதம்: அபராதம் எதுவும் இல்லை.
- இதர கட்டணம்: இதர கட்டணம் எதுவும் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
- பிறந்தசான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை.
சிறப்பு வரையறைகள்:
- இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.














