• படி 1: பதிவு விவாகத்திற்கு முன்பே விவாக பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
  • படி 2: விண்ணப்பதாரர் விவாக பதிவாளரை சந்தித்தல்-விவாக பதிவாளர் விண்ணப்பதாரரை சந்தித்தல்.
  • படி 3: விண்ணப்பதாரரின் வயது வரம்பை சரிபார்த்தல் (தேசிய அடையாள அட்டை அல்லது பிறந்தசான்றிதழ் கொடுத்தல்)
  • படி 4: விண்ணப்பதாரர்கள் கைகளை மற்றும் விவாகத்திற்கான சத்தியபிராமனத்தை திரும்பக்கூறுதல் வேண்டும்.
  • படி 5: பதிவாளர் விண்ணப்பதாரரின் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்வார்.
  • படி 6: சாட்சியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தில் கையொப்பம் இடுவார்கள்.
  • படி 7: விவாக சான்றிதழ் விண்ணப்பதாரர் பெறுதல்.

தகுதி:

கீழ் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி விண்ணப்பதாரர்கள் இந்த சேவையைப் பெறலாம்,

  • விண்ணப்பதாரரின் வயது பதினெட்டு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் இருவரும் இஸ்லாமியராக இருக்ககூடாது.
  • விண்ணப்பதாரர்கள் பாரம்பரிய கண்டியன் பிரிவினை சார்ந்தவராக இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக நுவரெலியா, மாத்தளை, கண்டி, அநுராதபுரம், பொலநறுவை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகல, தெற்கு-வவுனியா)

சமர்ப்பிக்கும் முறைகள்:

விண்ணப்பதாரர் அந்த வட்டார விவாகப் பதிவாளரிடம் விவாகம் நடப்பதற்கான தகவலை முன்கூட்டியே தெரிவித்து விவாகத்தை பதிவு செய்வதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

விண்ணப்பப்படிவம்:

விண்ணப்பபடிவம் C3

காலக்கேடு:

  • செயல்முறை காலக்கேடு: ஒரு நாளுக்குள்
  • சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு: குறிப்பிட்ட காலக்கோடு இல்லை.
  • ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப்படும்.

சேவை தொடர்பான கட்டணங்கள்:

  • செலவினத்துக்குரிய விண்ணப்பத்தை பெறுதல்: விண்ணப்பத்தை கட்டணம் இன்றி இலவலசமாக வழங்குதல்.
  • கட்டணம்: சேவை கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படும்.
  • அபராதம்: அபராதம் எதுவும் இல்லை.
  • இதர கட்டணம்: இதர கட்டணம் எதுவும் இல்லை.

தேவையான இணைப்பு ஆவணங்கள்:

  • பிறந்தசான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை.

சிறப்பு வரையறைகள்:

  • இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.

News & Events

18
ஜன2023
2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2026 ஓய்வூதியம் செலுத்தும் தேதி                     மாதம்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top