- கிருஸ்தவர்களின் விவாகம் தேவஸ்தானங்களுக்குள் நடாத்த வழி வகுக்கப்பட்டுள்ளது.
- விவாக அறிவித்தல் இரு பிரதிகளில் எழுதி உறுதிப்படுத்தி பிரிவின் விவாக பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- அறிவித்திலினை உறுதிப்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள்
- பிரிவின் விவாகப் பதிவாளர்கள்
- சமாதான நீதவான்
- பிரதேசத்தின் நொத்தாரிசுமார்
- மதகுருவானவர்
- விவாக அறிவித்தலினை சமர்ப்பிப்பதற்காக பூரணப்படுத்தப்பட வேண்டிய தேவைகள்
- திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
- விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் பிரிவில் வசித்தல்.
- விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் ஓரே பிரிவில் அல்லாது வெவ்வேறு பிரிவில் வசித்தல்.
- திறத்தாரில் ஒருவர் விவாக அறிவித்தல் கொடுக்கு முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கைக்குள் வதியாது மற்றைய திறத்தார் 10 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
- இருவரில் ஒருவராவது விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கையில் வதியாது, ஒரு திறத்தார் 04 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
- திறத்தார் இருவரும் முந்திய பிறந்த தினத்தில் 18 வயதினை பூர்த்தி செய்திருத்தல்.
- அவர்கள் விவாகம் புரிவதற்கு தடை செய்யப்பட்ட உறவினை கொண்டிருக்கவில்லை என்பது
- அச்சமயம் செல்லுப்படியாகும் விவாகத்தினை கொண்டிருக்கவில்லை என்பது
- திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
- பதிவாளர் அல்லது மேலதிக மாவட்ட பதிவாளரிடம் “பதிவாளரின் சான்றிதழ்” இனை பெற்றுக் கொள்ளவும்.
- அவ் பதிவாளரின் சான்றிதழ் விவாகம் நிறைவேற்றப்படும் தேவஸ்தானத்தின் மதகுருவிடம் ஒப்படைக்குக. அத்துடன் இரத்துச்செய்யப்படாத ரூபா 25.0 பெறுமதியான முத்திரையினை வழங்குக.














