• திறத்தார் இருவரும் முஸ்லிம்கள் அல்லாத விடத்து ஏனைய அனைவருக்கும் விவாகம் (பொது) பதிவு செய்தல் கட்ளைச் சட்டத்தின் கீழ் விவாகம் செய்ய முடியும்.
  • விவாக அறிவித்தல் பிரதிகள் இரண்டில் எழுதி உறுதிப்படுத்தி பிரிவின் விவாக பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
  • அறிவித்திலினை உறுதிப்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள்;
    • பிரிவின் விவாகப் பதிவாளர்கள்
    • சமாதான நீதவான்
    • பிரதேசத்தின் நொத்தாரிசுமார்
    • மதகுருவானவர்
  • விவாக அறிவித்தலினை சமர்ப்பிப்பதற்காக பூரணப்படுத்தப்பட வேண்டிய தேவைகள்
    • திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
      • விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் பிரிவில் வசித்தல்.
      • விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் ஓரே பிரிவில் அல்லாது வெவ்வேறு பிரிவில் வசித்தல்.
      • திறத்தாரில் ஒருவர் விவாக அறிவித்தல் கொடுக்கு முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கைக்குள் வதியாது மற்றைய திறத்தார் 10 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
      • இருவரில் ஒருவராவது விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கையில் வதியாது, ஒரு திறத்தார் 04 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
    • திறத்தார் இருவரும் முந்திய பிறந்த தினத்தில் 18 வயதினை  பூர்த்தி செய்திருத்தல்
    • அவர்கள் திருமணம் புரிவதற்கு தடை செய்யப்பட்ட உறவினை கொண்டிருக்கவில்லை என்பது,
    • அச்சமயம் செல்லுப்படியாகும் விவாகத்தினை கொண்டிருக்கவில்லை என்பது.
  • விவாகம் (பொது) பதிவு செய்வதற்காக அறிவித்தல் கொடுத்து 14 நாட்கள் செல்லுப்படியாக வேண்டும். அவ்வாறு 14 நாட்கள் கழியும் முன் விவாகம் (பொது) பதிவு செய்வதற்கு இயலும்.
  • அலுவலகத்திற்கு வெளியில் விவாகத்தினை பதிவு செய்வதற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

News & Events

18
ஜன2023
2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2026 ஓய்வூதியம் செலுத்தும் தேதி                     மாதம்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top