- படிப்படியான வழிமுறைகள்:
- படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)
- படி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- படி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்
- படி 4: மொழிபெயர்ப்புக்கான செயல்பாடு நடப்பதற்கு கிட்டதட்ட 3 நாட்களாகும்.
- படி 5: மொழிப்பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல்.
தகுதி:
உண்மையான பிறப்புச்சான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
அனைத்து விண்ணப்பங்களும் தலைமைப்பதிவாளர் காரியாலத்தின் கரும்பீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவம்:
விண்ணப்பபடிவம் பிறப்புச்சான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்.
காலக்கேடு:
செயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு:
வேலை நாட்கள் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரைவேலை நாட்கள் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரைதிறந்திருக்கும் நேரம் - மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரைவிடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
- விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்: விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல்.
- கட்டணம்: ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00
- அபராதம்: அபராதங்கள் எதுவும் உள்ளடங்கவில்லை.
- இதரக்கட்டணம்: இதரக்கட்டணங்கள் எதுவும் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
உண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய பிறப்புச்சான்றிதழ்.
சேவைக்கான பொறுப்புக் குழு:
மொழிப்பெயர்ப்பாளர்
சிறப்பு வரையறைகள்:
இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.














