- மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் வயது 14 ற்கு அதிகமாதல் கூடாது.
- விண்ணப்பதாரர் மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள்
- விண்ணப்பதாரரது வயது 25ற்கு அதிகமாயிருத்தல் வேண்டும்.
- பிள்ளையினை மகவேற்பு செய்வதற்கு விண்ணப்பதாரர் மற்றும் உரிய பிள்ளைக்கிடையில் வயது வித்தியாசம் குறைந்தது 21 வயதாவது இருத்தல் வேண்டும்.
- உரிய பிள்ளை விண்ணப்பதாரரின் பாதுகாவலில் இருந்தால் விண்ணப்பதாரரின் சகோதரரின் அல்லது சகோதரியின் அல்லது அவர்களின் பாதுகாப்பில் உள்ள பிள்ளையாயின் அல்லது அவர்களின் விவாக திறத்தாரின் பிள்ளையாயின் மேற்குறிப்பிட்ட நிலைமை உரியதல்ல.
- மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் வயது 10ஐ விட அதிகமாயின் பிள்ளையின் விருப்பம் அவசியமானது.
- விவாக திறத்தாரின் மூலம் (கணவன் மற்றும் மனைவி) விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட முடியும்.
- மகவேற்பு கட்டளையினை வழங்குவது மாவட்ட நீதிமன்றத்தினால் ஆகும்.
- அக்கட்டளை பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும்.
- மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் பிறப்பினை மீள பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- பிறப்பினை மீள பதிவு செய்துக்கொள்ள கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- பிறப்பினை மீள பதிவுசெய்துக்கொள்வதற்கான விண்ணப்பம்
- மகவேற்பு செய்த பெற்றோரின் விவாகச் சான்றிதழ்
- தாய் மற்றும் தந்தையின் விவாகச் சான்றிதழ்
- மகவேற்புச் சான்றிதழ்
- பிறப்பினை மீள பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பத்தினை பிள்ளையின் பிறந்த இடத்திற்குரிய பிரதேசத்திற்குரிய பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வலய அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.














